நான் கண்ட தலைவனில்
எவனும் உருபடியில்லை
என் வீட்டில் கஞ்சி செய்ய
ஒருபடி அரிசியுமில்லை
முன்னேற ஒருபடியில்லை
இன்னும் ஒருபடி மேலே சென்றால்
எனக்கு உடுத்த ஒரு உருப்படி இல்லை
வேதனையில் வழிந்தோட கண்ணிருமில்லை
சாதி சொல்லி ஔட்டு கேட்டு
நம்மை சந்தடியில் நிற்கவைப்பார்
தற்பெருமை பேசி பேசி
நம்மை தலைகுனிய நிற்க வைப்பார்
தமிழ் தமிழ் என்று சொல்லி - நம்
குரல் வலையை நெறித்து வைப்பார்
தான் தான் தமிழ் காவலர் என
தம்பட்டம் அடித்துக் கொள்வார்
தொலைநோக்கு பார்வையின்றி
திட்டத்தை தீட்டி வைப்பார்
நான் வலை போட்டு தேடினாலும்
ஒரு தொலைநோக்கு தலைவனில்லை
2 comments:
very true govind...
Leed panna theriyaathu!aanaa panatha
load pannatheriyum leaderukku !!
Post a Comment