நீ நல்லவன் என்பதும்கெட்டவன் என்பதும்
சூழ்நிலை பொருத்து அமைகிறது
நல்லவன் என்றால் பெருமையில்லை
கெட்டவனானால் அது உன் பழியில்லை
பின் மாறிட நினைப்பதும் தவறில்லை
கடவுளை தேடி அலைவதனாலே
பயன் ஒன்றும் உனக்கு வாராது
பிறர் துன்பத்தை நீக்கி வாழ்ந்தாலே
உலகம் உன்னை மறவாது
எடுப்பது என்பதும் மறைப்பது என்பதும்
மனிதன் வகுத்த பண்பாடு
பொதுவாய் எல்லாம் இருப்பதுதானே
உலகம் கொடுத்த சமன்பாடு
ஆசையை துறக்க ஆசைப்படு
கடமையை முடிக்க புறப்படு
நீ விடுதலை கொண்டு வெளிப்படு
ஏழ்மையை ஒழிக்க பாடுபடு
1 comment:
Kettavanai kadantha nallavane siranthavan un paadal !!
Post a Comment