பிறந்தபோது நீ அழுதாய்
இறக்கும்போது பிறர் அழுவார்
துன்பம் மறக்கும் வழி யார் அறிவார்
ஆசை துறக்கும்வழி நீ சொல்வாய்
பிறந்த போது இங்கு வந்தாய்
இறந்த பின்பு எங்கு சென்றாய்
வந்த வழி தெரிகிறது - நீ
போகும் வழி தெரியவில்லை
பிறந்த போது சந்தோஷம்
இறந்த பின்பு கலையும் வேஷம்
யார் கொடுத்தார் இவ்வாழ்க்கை
நினைத்து பார்த்தால் வேடிக்கை
பிறந்தபோது கொடுததவன்தான்
இறக்கும்போது எடுத்துக்கொண்டான்
இல்லை என்று நான் சொன்னால்
கொள்ளை கொண்டு அவன் போவான்
1 comment:
Ethugai monai udan sila ! Puthu kavithaiyai sila,marabudan koodiya sandhangalai sila ,nalla ezhuthara kumara vaazhthukkal!
Post a Comment