Sunday, May 18, 2008

ஊமை மொழி உனக்குண்டு

முன்பு ஒரு வாட்டி
உன் உணர்ச்சியை நான் தட்டி
கையிலே கொடுத்தேன்
தார் சட்டி

இந்த வாட்டி
ஆங்கிலத்தை மூட்டை கட்டி
கழனியை உழுடா
என் தங்ககட்டி

வெளியில் செல்லாதே
விஷயத்தை அறியாதே
குண்டு சட்டியிலே
குதிரையை நீ ஒட்டு

மொழி மொழி மொழி
உனக்கு இதுதான் தனிவழி
திருகுறளை பிறர் கேட்டால்
சொல்ல முடியாமல் விழி

டெல்லிக்கு நான் சென்றால்
மொழி மாற்ற பலருண்டு
டெல்லிக்கு நீ சென்றால்
ஊமை மொழி உனக்குண்டு

அம்மனமாய் திரிந்த நீ
ஆடையை உடுத்துகின்றாய்
ஆஹா
அறிவு வளர்ந்துவிட்டது

இன்று கணிப்பொறியை
கண்ணால் கண்டுவிட்டாய்
நீ கணிதமேதை
ராமானுஜம்தான்

சிறுவட்டத்தில் வாழ்க்கை வாழ
இத்திட்டத்தை தீட்டுகிறேன்
இவ்வட்டத்தை பூச்சியமாக்க
மீண்டும் அரியனை தந்துவிடு

Blog Archive