Thursday, August 21, 2008

Who am I ?

குமரன் நான் இளமையுடன் இருக்கும் இளங்குமரன்
கவிஞன் காதல் கவிதை சொல்லும் கலைஞன்

ரசிகன் உலகை ரசிக்கத் தெரிந்த இளைஞன்
மனிதன் மனதை மதிக்க தெரிந்த புனிதன்

இனியவன் இன்சொல் பேசும் அறியவன்
எளியவன் ஏழ்மையை ஒழிக்கத்துடிக்கும் வலியவன்

புதியவன் புரச்சியை விதைக்கத்துடிக்கும் தலைவன்
வல்லவன் வாய்மையே வெல்லும் என சொல்பவன்

நல்லவன் உண்மையை நாடி செல்பவன்

கண்ணும் பெண்ணும்

கண்ணுக்கும் பெண்ணுக்கும் சொந்தமுண்டு
காவியங்கள் படைப்பதெல்லாம் இரண்டில் ஒன்று

உனக்கு இடையில்லை என்றுசொன்னால் கூற்றுண்டு
அதை ஏற்றுக்கொள்ள இவ்வுலகில் பலருண்டு

சங்கம் கொண்டு வளர்ந்தாளே கன்னித்தமிழ்
மழலைபேசும் உந்தன் மொழி கிள்ளைத்தமிழ்

பகலென்றும் இரவென்றும் இயற்கை செய்யும் மாற்றம்
உன் கண்கள் சொல்லும் ஜாலம் எல்லாம் இயற்கையிடம் தோற்கும்

நடந்துவரும் உன்னழகு திருத்தேரோ - உன்
புன்னகைதான் அழகு சேர்க்கும் பொன்னகையோ

மனதை மயக்கும் முகத்தை உனக்கு இறைவன் தந்தான் - அதில்
மயங்க சொல்லி என்னை ஏனோ ஆணையிட்டான்

மனதையெல்லாம் கொள்ளை கொண்டு நீ போனாய் - இன்று
கண்ணில் வரும் காட்சியெல்லாம் நீ ஆனாய்.

Year 2000 TN Election situation

நாட்டு நடப்பு கேட்டுக்கோ பொன்னையா
நாலும் இங்கே சொல்லப்போறென் கேளையா

என் சித்தியோட ஔடிப்புட்டான் கோட்டீஸவரன்
நான் சித்தபிரமை ஆகிவிட்டேன் கேட்டவுடன்

மரம் வெட்டி சாய்த்துவிட்டான் காலடியில்
அந்த மர்மம் என்ன சொல்லிவிடு காடுவெட்டி

தோழியோட சேர்ந்துபோறா கோவிலுக்கு
பாவம் எல்லாம் தீர்ந்தாதானே தேர்தலுக்கு

மண்டயில ஒன்னும் இல்ல சிலருக்கு
அணிய மாத்திவைக்க நினைக்கிறாங்க தேர்தலுக்கு

அய்யன் வந்து காப்பாத்துவான் தேர்தலிலே
உன் பையன் தொல்ல தாங்கவில்லை மதுரையிலே

மூப்பு வந்து தளர்ந்துவிட்டேன் நானய்யா - உன்
முடிவை இன்னும் சொல்லவில்லை ஏனய்யா

இந்த முறையும் வருவயா? - இல்லையா?
இமயமலை போறப்போறயா சொல்லுயா?

அரை வயிறு கஞ்சிதானே நமக்கு - நீ
அடுத்தவேளைய பார்த்தாதானே சோற்றுக்கு.

Monday, August 18, 2008

duet song

ஆ: விளக்கினை அனைத்து விடிகின்றவரையில்
கதைபடிக்காமல் உன்னை விடமாட்டேன்

பெ: கற்பனை கதையினில் கண்ட காட்சிகலெல்லாம்
இன்று கண்டு கொள்ளாமல் உன்னை விடமாட்டேன்

ஆ: மலர்களில் சுரக்கும் தேன் சுவையெல்லாம்
வண்டுகள் குடிக்க படைத்தானே

பெ: குழிவிழுந்த கன்னத்தில் என் இதழ்ரசம் ஊற்றி
பருகாமல் நான் உன்னை விடமாட்டேன்

ஆ: பழகிய பிறகு அச்சம் இருந்தால்
இன்பங்கள் என்றும் கிடைக்காது

பெ: அச்சம் நாணம் இருந்தால்தானே
பெண்மை என்றும் திகட்டாது

ஆ: பேசிப்பேசி களிப்பதனாலே பயன்
ஔன்றும் நமக்கு வாராது

பெ: ஆசைதீர அணைப்பதனாலே
என் ஏக்கம் என்றும் தீராது

Blog Archive