நீ நல்லவன் என்பதும்கெட்டவன் என்பதும்
சூழ்நிலை பொருத்து அமைகிறது
நல்லவன் என்றால் பெருமையில்லை
கெட்டவனானால் அது உன் பழியில்லை
பின் மாறிட நினைப்பதும் தவறில்லை
கடவுளை தேடி அலைவதனாலே
பயன் ஒன்றும் உனக்கு வாராது
பிறர் துன்பத்தை நீக்கி வாழ்ந்தாலே
உலகம் உன்னை மறவாது
எடுப்பது என்பதும் மறைப்பது என்பதும்
மனிதன் வகுத்த பண்பாடு
பொதுவாய் எல்லாம் இருப்பதுதானே
உலகம் கொடுத்த சமன்பாடு
ஆசையை துறக்க ஆசைப்படு
கடமையை முடிக்க புறப்படு
நீ விடுதலை கொண்டு வெளிப்படு
ஏழ்மையை ஒழிக்க பாடுபடு
Thursday, July 17, 2008
பிறந்தபோது நீ அழுதாய்
இறக்கும்போது பிறர் அழுவார்
துன்பம் மறக்கும் வழி யார் அறிவார்
ஆசை துறக்கும்வழி நீ சொல்வாய்
பிறந்த போது இங்கு வந்தாய்
இறந்த பின்பு எங்கு சென்றாய்
வந்த வழி தெரிகிறது - நீ
போகும் வழி தெரியவில்லை
பிறந்த போது சந்தோஷம்
இறந்த பின்பு கலையும் வேஷம்
யார் கொடுத்தார் இவ்வாழ்க்கை
நினைத்து பார்த்தால் வேடிக்கை
பிறந்தபோது கொடுததவன்தான்
இறக்கும்போது எடுத்துக்கொண்டான்
இல்லை என்று நான் சொன்னால்
கொள்ளை கொண்டு அவன் போவான்
இறக்கும்போது பிறர் அழுவார்
துன்பம் மறக்கும் வழி யார் அறிவார்
ஆசை துறக்கும்வழி நீ சொல்வாய்
பிறந்த போது இங்கு வந்தாய்
இறந்த பின்பு எங்கு சென்றாய்
வந்த வழி தெரிகிறது - நீ
போகும் வழி தெரியவில்லை
பிறந்த போது சந்தோஷம்
இறந்த பின்பு கலையும் வேஷம்
யார் கொடுத்தார் இவ்வாழ்க்கை
நினைத்து பார்த்தால் வேடிக்கை
பிறந்தபோது கொடுததவன்தான்
இறக்கும்போது எடுத்துக்கொண்டான்
இல்லை என்று நான் சொன்னால்
கொள்ளை கொண்டு அவன் போவான்
பிறப்பு இங்கே வருகிறது
இறப்பு எங்கே செல்கிறது
உடலின் மாற்றம் தெரிகிறது
உயிரின் மாற்றம் புரியவில்லை
இதை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை
இது யாருக்கும் இன்னும் புரியவில்லை
இறப்பினை மனிதன் தள்ளிப்போட்டான்
இருந்தாலும் அவன் உன்னை விடமாட்டான்
இறந்திடும் நாள் நீயும் அறிந்து கொண்டால்
அந்த மகத்துவம் நீயும் புரிந்துகொண்டால்
வாழ்க்கைதான் என்றும் இனிக்காது
பின் வாழவே உனக்கு பிடிக்காது
இறப்பு எங்கே செல்கிறது
உடலின் மாற்றம் தெரிகிறது
உயிரின் மாற்றம் புரியவில்லை
இதை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை
இது யாருக்கும் இன்னும் புரியவில்லை
இறப்பினை மனிதன் தள்ளிப்போட்டான்
இருந்தாலும் அவன் உன்னை விடமாட்டான்
இறந்திடும் நாள் நீயும் அறிந்து கொண்டால்
அந்த மகத்துவம் நீயும் புரிந்துகொண்டால்
வாழ்க்கைதான் என்றும் இனிக்காது
பின் வாழவே உனக்கு பிடிக்காது
நீயே உனக்கு எதிரி
இந்த உண்மை இப்போது புரிகிறதா?
உணவை எடுக்க மறுத்துவிட்டால்
மயக்கத்தை உனக்கு கொடுக்கிறது
கேட்டது உனக்கு கிடக்காவிட்டால்
கோபத்தால் அறிவை மறைக்கிறது
ஆசையை உனக்கு அள்ளித்தந்து
துன்பத்தில் தள்ளிவிட்டு சிரிக்கிறது
இருப்பது உனக்கு போதவில்லை
என்றஉணர்வை எப்போதும் தருகிறது
உயிருக்கு ஆன்மா சொந்தமில்லை
என்ற உணர்வை உனக்கு தந்ததில்லை
- அக்டோபர் 25 1997
இந்த உண்மை இப்போது புரிகிறதா?
உணவை எடுக்க மறுத்துவிட்டால்
மயக்கத்தை உனக்கு கொடுக்கிறது
கேட்டது உனக்கு கிடக்காவிட்டால்
கோபத்தால் அறிவை மறைக்கிறது
ஆசையை உனக்கு அள்ளித்தந்து
துன்பத்தில் தள்ளிவிட்டு சிரிக்கிறது
இருப்பது உனக்கு போதவில்லை
என்றஉணர்வை எப்போதும் தருகிறது
உயிருக்கு ஆன்மா சொந்தமில்லை
என்ற உணர்வை உனக்கு தந்ததில்லை
- அக்டோபர் 25 1997
Wednesday, July 16, 2008
வாழ்க்கையே ஒரு கணக்கு
வாழ்க்கையே ஒரு கணக்கு
மனிதன் போடுவான் மனக்கணக்கு
நாமெல்லாம் இறைவனின் பொருப்பு
இதில் உன்னுடன் எனக்கேன் வழக்கு
தத்துவங்கள் சொல்ல எனக்கு தெரியவில்லை
சத்தியத்தை தொலைத்துவிட்டால் வாழ்க்கையில்லை
இந்த மகத்துவத்தை புரிந்துகொண்டால் தொல்லையில்லை
இல்லையேல் நி என்றும் மனிதனில்லை
அவதாரம் நானெடுக்க தெய்வமில்லை
அன்பிருக்கும் வாழ்க்கை என்றும் திகட்டுவதில்லை
அள்ள அள்ள என்றுமது குறைவது இல்லை
இதை நான் சொல்ல வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை
வேற்றுமையே மனங்கள் செய்யும் வேலையடா
ஒன்றுபட்டால் வாழ்க்கை இனிக்கும் வேளையடா
இதில் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் நான் ஏனடா
இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை என்றும் வாழ்க்கையடா
மனிதன் போடுவான் மனக்கணக்கு
நாமெல்லாம் இறைவனின் பொருப்பு
இதில் உன்னுடன் எனக்கேன் வழக்கு
தத்துவங்கள் சொல்ல எனக்கு தெரியவில்லை
சத்தியத்தை தொலைத்துவிட்டால் வாழ்க்கையில்லை
இந்த மகத்துவத்தை புரிந்துகொண்டால் தொல்லையில்லை
இல்லையேல் நி என்றும் மனிதனில்லை
அவதாரம் நானெடுக்க தெய்வமில்லை
அன்பிருக்கும் வாழ்க்கை என்றும் திகட்டுவதில்லை
அள்ள அள்ள என்றுமது குறைவது இல்லை
இதை நான் சொல்ல வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை
வேற்றுமையே மனங்கள் செய்யும் வேலையடா
ஒன்றுபட்டால் வாழ்க்கை இனிக்கும் வேளையடா
இதில் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் நான் ஏனடா
இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை என்றும் வாழ்க்கையடா
WHAT A BEAUTY
எப்புறம் உன்னை பார்த்தாலும் இனிக்கிறது
உன்னை இப்பொழுதே சிறையெடுக்க துடிக்கிறது
வானவில்லை வளைத்திட துடிக்கிறது
அதன் வண்ணங்கள் உன்னிடத்தில் இருக்கிறது
ஏழ்கவிதை இயற்றிட நினைக்கிறது
அதில் உன்புகழை எடுத்துரைக்க இனிக்கிறது
ஏழைக்கு வறுமை என்றும் துணையுண்டு
எனக்கென்று இப்போது யாருண்டு
விளக்கொன்று ஒளிதந்து சிரிக்கிறது
எனையெடுத்து உனைத்தந்தால் உயிருண்டு
உன்னை இப்பொழுதே சிறையெடுக்க துடிக்கிறது
வானவில்லை வளைத்திட துடிக்கிறது
அதன் வண்ணங்கள் உன்னிடத்தில் இருக்கிறது
ஏழ்கவிதை இயற்றிட நினைக்கிறது
அதில் உன்புகழை எடுத்துரைக்க இனிக்கிறது
ஏழைக்கு வறுமை என்றும் துணையுண்டு
எனக்கென்று இப்போது யாருண்டு
விளக்கொன்று ஒளிதந்து சிரிக்கிறது
எனையெடுத்து உனைத்தந்தால் உயிருண்டு
Subscribe to:
Posts (Atom)