Monday, January 21, 2008

HOW TO CHANGE THIS ILLUTION?

நெஞ்சு பொருக்கவில்லயே
உன் வீரம் கொஞ்சி
வெற்றி கொள்ளும் இளமை
வீணாக போகக்கண்டால் - என்
நெஞ்சு பொருக்கவில்லயே

பெற்ற தாய் தந்தை வயிற்றில்
பாலை வார்க்கச்சொன்னால் - நீ
நடிகனின் பொம்மைக்கு
பாலை வார்க்கும்போது - என்
நெஞ்சு பொருக்கவில்லயே

பகுத்தறிவு தந்தை
கடவுளை விரட்ட - நீ
நடிகையை கடவுளாக்கி
கோவில் கட்டி கும்பிடும்போது - என்
நெஞ்சு பொருக்கவில்லயே

கோடி பணத்தில் புரண்டு
கொள்கையை காற்றில் விட்டு
தன்னலம் வாழ்க்கை வாழும்
நடிகனை துதிக்கும்போது - என்
நெஞ்சு பொருக்கவில்லயே

Saturday, January 19, 2008

FARMERS

விவசாய நாடு - பொருக்கவில்லை
இந்த விவசாயிகளின் பாடு

இறைவன் கண்ட தொழிலாளி
இந்த நாட்டில் இவனே ஏமாளி

உழுது அவனும் பயிரிட்டான் - விளைந்த
நெல்லையும் விற்றும் கை சுட்டான்

நெல்லுக்கு சொந்தம் விவசாயி - அதன்
விலையை சொல்வது முதலாளி

ஏனிந்த பேதம் தெரியாதா - விவசாயி
நாதியற்ற கூட்டம் என்று புரியாதா

உழுபவனுக்கு நிலம் சொந்தம் - நெல்லை
விளைத்தவன் சொல்வான் விலை நிர்ணயம்

இந்த சட்டம் அமலுக்கு வரவேண்டும் - விவசாயியின்
வாழ்க்கை முன்னேற்றம் பெறவேண்டும்

Thursday, January 17, 2008

I AM A RESEARCHER

நான் ஆராய்ச்சியாளன்
உன் உடலின் ஆட்சியாளன்
செவ்வாயில் என் ஆராய்ச்சி
அது சொர்கத்தில் முடிவாச்சி

காற்றாக நான் இருந்தால்
உன் மூச்சோடு உள்சென்று
வெளியேறும் வேளையிலே-உன்
மார்போடு உறவாடி அங்கு
மோட்சத்தை எதிர்கொள்வேன்

உன் இடையினிலே கை நழுவ
நீ மாலையாக எனைத்தழுவ - இதை
மறுக்கவில்லை ஒரு கனமும்
நான் மறக்கவில்லை ஒரு பொழுதும்

போதும் இந்த ஆராய்ச்சி
புதிர் எல்லாம் புரிந்தாச்சி
வாழ்க்கை என்ன பயனாச்சி - இந்த
கேள்வி மனசில் முளைச்சாச்சி

Wednesday, January 16, 2008

A FRIEND IN NEED, A FRIEND INDEED

நண்பனே!
என் நிலையை உணர்ந்தவனே

கண்கலங்கி நின்ற்போது
உதவி கரம் கொண்டு என்னை அனைத்தாய்

வீரம் கொண்டு நான் நின்றால் என்
வெற்றிக்கு துணைபுரிவாய்

காதலிலே கனிந்து நின்றால்
என் கனவிற்கு உதவி புரிவாய்

வாழ்க்கை என்ற ஔடத்திலே
துடுப்பாகி துணை புரிந்தாய்

பெற்றெடுத்த தாய் தந்தை
கடமையினால் உறவாட

உடன்பிறந்த நெஞ்சங்கள்
என் செல்வத்தால் சிற்ப்பாக

வாழ்க்கை முழூதும் நீ வருவாய் என்
வாழ்வில் முழூமை நீ தருவாய்

DO'S & DONOT'S

தெரியாத கடவுளுக்கு
மரியாதை செலுத்துவதேன்

வறுமை அறியாத சமுதாயம்
வழிவகுப்போர் கடவுளடா

குடிபோதை தினம் மயக்கம் - அவன்
குடும்பத்தில் பசி மயக்கம்

திட்டம் போட்டால் வழி பிறக்கும்
கடையை திறந்து வைத்தால் குடி கெடுக்கும்

மக்களுக்கு திட்டம் போட்டால் தலைவனடா - இங்கு
கட்சிக்காக திட்டம் போட்டு கொள்ளையடா

அறியாமை, மடைமை கொண்டவர் பாவம்
அவரின் வாழ்க்கை மாற கல்வி ஒன்றே போதும்

சகிப்பு தன்மை நம்மிடத்தில் இருக்கு
வாழ்க்கை தரம் உயர இன்னும் தேவையிருக்கு

Blog Archive