நெஞ்சு பொருக்கவில்லயே
உன் வீரம் கொஞ்சி
வெற்றி கொள்ளும் இளமை
வீணாக போகக்கண்டால் - என்
நெஞ்சு பொருக்கவில்லயே
பெற்ற தாய் தந்தை வயிற்றில்
பாலை வார்க்கச்சொன்னால் - நீ
நடிகனின் பொம்மைக்கு
பாலை வார்க்கும்போது - என்
நெஞ்சு பொருக்கவில்லயே
பகுத்தறிவு தந்தை
கடவுளை விரட்ட - நீ
நடிகையை கடவுளாக்கி
கோவில் கட்டி கும்பிடும்போது - என்
நெஞ்சு பொருக்கவில்லயே
கோடி பணத்தில் புரண்டு
கொள்கையை காற்றில் விட்டு
தன்னலம் வாழ்க்கை வாழும்
நடிகனை துதிக்கும்போது - என்
நெஞ்சு பொருக்கவில்லயே
1 comment:
Unmayaana kobam,
Post a Comment