Sunday, September 7, 2008

சோர்வான உள்ளங்களை எறிந்து
துணிவான பாதையை வகுத்து
வளமான வாழ்வு வாழ
வாழ்த்துகள் வந்து குவியும்
தவறென்று உணர்ந்தால் திருத்தி
பிறர் உணர்வோடு கலந்து
கபட மற்ற வாழ்வு வாழ
ஊர் புகழும் உன்னை என்றும்
தமிழால்
தாலாட்டு கேட்டோம்
தமிழால்
மொழி கற்றோம்
தமிழால்
காதல்
தேனை சுவைக்கின்றோம்
தமிழால்
உறவுகளை படிக்கின்றோம்
தமிழால்
தேசத்தை காக்கின்றோம்
தமிழால்
உதவுகிறோம் தமிழனுக்கு
தமிழால்
கேட்கிறோம் உரிமைகளை
தமிழால்
பெறுகிறோம் புகழை
தமிழால்
அடைகின்றோம் பொருளை
தமிழே!
மொத்தத்தில் உன்னுள் நாங்கள்

Wednesday, September 3, 2008

DEPRESSION

வாழ்வே இன்று வெறுக்கிறதா
இது என்ன வாழ்வென்று சளிக்கிறதா

அடிமையில்லாமல் வாழ்ந்தாலே
வாழ்க்கை என்றும் வெறுக்காதே

பொறாமையை நீயும் தள்ளிவைத்தால்
சச்சரவு கேட்கும் உத்தரவு

பொன்னான மனம் உனக்கு உன்டென்று
புரியாத பேருக்கு காட்டிவிடு

கண்ணாக உன்னை மதித்திடுவார்
அந்த களிப்பில் கவலைகள் கறைந்துபோகும்
உன் மனம்தான் இன்று அலைகிறதா
ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கிறதா

அலையை கரைதான் தடுக்கிறது
ஆசையை வெட்கந்தான் மறைக்கிறது

தெள்ளத்தெளிந்த நீரோடை
தென்றல்காற்றால் அசைகிறது

கனவில் ஊறும் நெஞ்சங்கள்
காதல் கொண்டால் தவிக்கிறது

Blog Archive