"கனவு மெய்ப்பட வேண்டுமானல் கண்டிப்பாக, முதல் கனவு காண வேண்டும். பிறகு அந்தக் கனவை மெய் என மனதில் நிறுத்தி, அதற்காக உண்மையாக பாடுபட வேண்டும். கனவு மெய்ப்படும் என்ற கணிதம் புரிந்தவர்களுக்கு மட்டுமே கனவு மெய்ப்படும். கனவின் ஈர்ப்பு விசை எது என்பதைப் புரிந்து கொண்டால் வானம் வசப்படும். பகல் கனவு பக்காது என்கின்றனர். நிறைய விஷயங்களை நாம் தவறாகவே புரிந்து கொண்டு வருகிறோம். விழித்திருக்கும்போது காணும் கனவின் மறுபெயர்தான் நம்பிக்கை.
கடந்த காலம் என்பது முடிந்துபோன காலம். நிகழும் காலம் என்பதால்தான் நிகழ்காலம் என்கின்றனர். இந்த வினடி, இந்த நேரம்தான் நம் சொந்த மணித்துளி. எனவே, நிகழ்காலத்தை மட்டுமே கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
அழுதுகொண்டே கணிதம் படிப்பதைவிட, சிரித்துக் கொண்டே கவிதை படிப்பது மேல். எதைச் செய்கிறோம் என்பதைவிட எப்படிச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். முனைப்பில்லாத விதை முளைப்பதில்லை என்பதைப்போல, முயற்சி செய்யாத எதுவும் பிழைப்பதில்லை.
முடிந்தவரை எல்லாவற்றையும் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். ஒரே இலக்கை மட்டும் நிர்ணயம் செய்து கொள்ளாதீர்கள். அதையும் தாண்டி வாழ்க்கை என்ற மிகப் பெரிய சித்திரம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அறிவே மூலதனம்; கடின உழைப்பே கச்சாப் பொருள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்''
Sunday, October 19, 2008
Saturday, October 4, 2008
இல்லே!!! இல்லே!!!
அது இருந்தா இது இல்லே
இது இருந்தா அது இல்லே
எது இருந்தா தேவையில்லே - இங்கு
யாரிடந்தான் குறையில்லே
ஆசைக்குத்தான் அளவில்லே - அதை
குறைச்சிகிட்டா துன்பமில்லே
மனசு முட்டும் வரையில்லே
பதுக்கி வைப்பதும் முறையில்லே
இல்ல இல்ல என்று சொல்வான் பணக்காரன்
நீ இருப்பதை வைத்து வாழ்ந்துக்கிட்டா கெட்டிக்காரன்
இது இருந்தா அது இல்லே
எது இருந்தா தேவையில்லே - இங்கு
யாரிடந்தான் குறையில்லே
ஆசைக்குத்தான் அளவில்லே - அதை
குறைச்சிகிட்டா துன்பமில்லே
மனசு முட்டும் வரையில்லே
பதுக்கி வைப்பதும் முறையில்லே
இல்ல இல்ல என்று சொல்வான் பணக்காரன்
நீ இருப்பதை வைத்து வாழ்ந்துக்கிட்டா கெட்டிக்காரன்
Subscribe to:
Posts (Atom)