விவசாய நாடு - பொருக்கவில்லை
இந்த விவசாயிகளின் பாடு
இறைவன் கண்ட தொழிலாளி
இந்த நாட்டில் இவனே ஏமாளி
உழுது அவனும் பயிரிட்டான் - விளைந்த
நெல்லையும் விற்றும் கை சுட்டான்
நெல்லுக்கு சொந்தம் விவசாயி - அதன்
விலையை சொல்வது முதலாளி
ஏனிந்த பேதம் தெரியாதா - விவசாயி
நாதியற்ற கூட்டம் என்று புரியாதா
உழுபவனுக்கு நிலம் சொந்தம் - நெல்லை
விளைத்தவன் சொல்வான் விலை நிர்ணயம்
இந்த சட்டம் அமலுக்கு வரவேண்டும் - விவசாயியின்
வாழ்க்கை முன்னேற்றம் பெறவேண்டும்
No comments:
Post a Comment