வாழ்க்கை என்பது கொஞ்சகாலம் - அதை
வாழ்ந்து பார்க்கலாம் நெஞ்சம்நிறைய
காலமது கடந்து செல்ல
வயது மேலும் கூடுகிறது
இளமையது வசந்த காலம் - அது
இருக்கும்போது அறியாக்கோலம்
பருவம் மாறும் காலம்தோறும் - அதில்
உருவம்மாறி உண்மை கூறும்
வன்மை இல்லா காலம் வரும் - அங்கு
இன்பம் எங்கும் மனதில் ஊறும்
No comments:
Post a Comment