கண்ணுக்கும் பெண்ணுக்கும் சொந்தமுண்டு
காவியங்கள் படைப்பதெல்லாம் இரண்டில் ஒன்று
உனக்கு இடையில்லை என்றுசொன்னால் கூற்றுண்டு
அதை ஏற்றுக்கொள்ள இவ்வுலகில் பலருண்டு
சங்கம் கொண்டு வளர்ந்தாளே கன்னித்தமிழ்
மழலைபேசும் உந்தன் மொழி கிள்ளைத்தமிழ்
பகலென்றும் இரவென்றும் இயற்கை செய்யும் மாற்றம்
உன் கண்கள் சொல்லும் ஜாலம் எல்லாம் இயற்கையிடம் தோற்கும்
நடந்துவரும் உன்னழகு திருத்தேரோ - உன்
புன்னகைதான் அழகு சேர்க்கும் பொன்னகையோ
மனதை மயக்கும் முகத்தை உனக்கு இறைவன் தந்தான் - அதில்
மயங்க சொல்லி என்னை ஏனோ ஆணையிட்டான்
மனதையெல்லாம் கொள்ளை கொண்டு நீ போனாய் - இன்று
கண்ணில் வரும் காட்சியெல்லாம் நீ ஆனாய்.
1 comment:
Ha ha ha. Naan nenachen ! Thamizhoda oru naal nee vilayaaduva nnu!!
Post a Comment