Tuesday, November 27, 2007

AN UNIVERSAL POLICY

ஆண்டுகள் கோடி அழுதாலும்
மாண்டவர் என்றும் திரும்புவதில்லை

இருப்பவர் இங்கு சில கோடி
இறந்தவர் கணக்கில் பல கோடி

செல்வங்கள் அவனும் சேர்த்து வைத்தான்
பணத்தை அவனும் பதுக்கி வைத்தான்

சொந்தங்கள் இன்று அழுகின்றன
பணங்கள் மட்டும் சிரிக்கிறது

இளமையுடன் இருக்கும்போது
எத்தனை வகையில் ஆட்டமடா

இயற்க்கை இன்று மாற்றிவைத்தும்
இருப்பவர் இன்னும் மாறவில்லை

ஊர்வலமாக போகின்றான்
உறவுகள் மட்டும் அழுகின்றன

தெருவை நீயும் கடந்தபின்பு - அந்த
திசையில் யாரும் இல்லையடா

மனதை பார்க்க மறுத்தவனுக்கு
உலகை பார்த்த கடைசி நாள்

காலங்கள் தோறும் நடக்கின்ற
காட்சியில் நாம் எல்லாம் பொம்மையடா

1 comment:

Unknown said...

Pothuvaana uravugal ippadiththaan vaazhnthidumo !!

Blog Archive