
இருவரி கொடுத்தோனை தலைவணங்கி இப்
பொருள்வரி பொற்பாதம் சேர்த்தேன்.
-குமரன்
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகரம் தமிழின் முதல் எழுத்துப்போல, சூரியபகவானே
இந்த உலகின் முதல் மூலம்.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
அறிவும், நற்பண்பும் பெற்ற ஒருவரை மதிக்க தெரியாதவன்,
எவ்வளவு கற்றிருந்தாலும் பயனில்லை.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர்போன்ற மென்மையான மனதை கொண்டு இருப்போனை பின்பற்றி வாழ்வோர்கள் இந்த உலகில் இறந்த பின்பும் வாழ்வார்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெருப்பு இல்லாதவரின் வழிசேர்ந்து நடப்பவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
அறியாமையால் விளையும் இருவினைகளையும் சேர்த்த ஒருவனிடம் இறைவன் சேரமாட்டார் என்ற பொருளை உணர்ந்தவர் மட்டுமே இவ்வுலகில் புகழுடன் வாழ்வார்.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்புலன்களின் வழியாக வரும் தீய ஆசைகளை விட்டு, பொய்யற்ற ஒழுக்க நெறியை பின்பற்றி வாழ்பவரே நீண்டகாலம் வாழ்வார்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்கு உவமை இல்லாத பெரியோரை பின்பற்றி நடக்காதவருடைய மனக்கவலையை தீர்ப்பது கடினம்.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறவழியில் வாழும் பெரியவர்களின் வழிநடப்பவர்களன்றி மற்றவர்கள் பிறப்பாகிய கடலை நீந்தி கடப்பது கடினம்.
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை தலைவணங்கி நடக்காதவனின் தலையில் உள்ள உருப்புகள் இருந்தாலும் அவை பயனற்றவையே.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனை நினைத்து வாழ்பவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்தி கடப்பார், நினைக்காதார் நீந்த தெரியாமல் துன்புற்று கிடப்பார்.
11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
வானில் இருந்து உலகம் முழுதும் வாழ வருவதால் மழையை அமிழ்தம் என்று உணர்ந்து போற்றுவோம்.
12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
உண்பவருக்கு உணவை உருவாக்கி, அவர்களுக்கு தானும் ஒரு உணவாகி இவ்வுலகில் துவுவதுதான் மழை.
13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மழை இல்லாது போய்விட்டால் விரிந்து நீர் கிடக்கும் இவ்வுலகில் பசி நிலைத்து நின்று வருத்தும்.
14. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மழை என்னும் வருவாய் வளம் குன்றும் போது ஏர்கொண்டு உழவர்கள் உழமாட்டார்கள்.
15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பொய்யாமல் கெடுப்பதுவும், அப்படி கெட்டோர்க்கு துணையாய் நின்று தூக்கி நிறுத்துவதும் மழை.
16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
வானத்தின் மழைத்துளி வீழாது போனால் இங்கே சிறிய பசும்புல் முளைத்தலைக் கூட காண்பது அரிது.
17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
வானம் வரண்டு போனால், அந்த வானத்திற்கும் மேலே வாழ்பவர்களுக்காக செய்யும் சிறப்பான பூசைகள் நடக்காது.
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மேகத்தில் இருந்து மழை பெய்யாது போனால், பெருங்கடலின் நீர் வளம் கூட குன்றிவிடும்.
19. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
இப்பரந்த உலகில் மழை இல்லையெனில் தானமும் தவமும் இருக்காது.
20. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
நீர் இல்லாமல் உலகமில்லை. ஆகையால் இந்த உலகில் உள்ள யாருக்கும் மழை இல்லையெனில் ஒழுக்கம் இல்லாது போகும்.
21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
பற்றுக்களை துறந்த பெரியோர்களின் பெருமை அனைத்தும் கூறுவது இவ்வுலகில் இறந்தவர்களை எண்ணுவது போன்றதாகும்.
23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
நன்மை, தீமை - என்ற இரு-மைகளின் வகைகளை தெரிந்துகொண்டு வாழ்க்கை வாழ்பவர்களே இவ்வுலகில் பெருமை பெறுவர்.
24. உரனென்னுந் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
ஐம்புலன்களினால் ஏற்படும் ஆசைகளை தவிர்த்தவனுடைய ஆற்றலுக்கு வானுலகத்திற்கு தலைவனாகிய இந்திரனே சான்று.
26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
செய்வதற்கு முடியாது என்ற காரியத்தை செய்பவர்கள் பெரியோர்கள், செய்யாதவர்கள் சிரியோர்கள்.
27. சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைத வான் கட்டே உலகு.
28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
நிறைவான போற்றுதலை பெற்ற மனிதர்களின் பெருமையை இவ்வுலகத்தில் அவர்கள் கூறிய அறவழி கருத்துக்களே காட்டிவிடும்.
29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
நல்ல குணத்தால் உயர்ந்து நிற்பவர் ஒரு வினாடி சினம் கொண்டாலும் அதிலிருந்து அவரை காப்பது கடினம்.
30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான இரக்கம் கொண்டு அறவழியில் வாழ்பவரே அந்தணர் எனப்படுவார்.
31. சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
சிறப்பும், செல்வமும் கொடுக்கும் அறத்தினைத் தவிர உயிர்களுக்கு நன்மையானது எது?
32. அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
அறத்தினை விட நன்மையானதும் இல்லை; அதை மறப்பதை விட கேடு இவ்வுலகினில் இல்லை.
33. ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
37. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அ·தொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
39. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
40. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
43. தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஒம்பல் தலை.
44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்.
47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
49. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அ·தும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
50. வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
51. மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
No comments:
Post a Comment